தியானங்கள் பட்டியல்

2011ம் ஆண்டிலிருந்து கடவுளின் உதவியோடு எழுதி வந்த WEEKLY DEVOTIONS WITH EBENEZER என்ற இந்த ஆங்கில வாரந்தோறும் தியானங்களை 26.02.2023 அன்றிலிருந்து தமிழிலும் வாரந்தோறும் வெளியிட கடவுள் உதவியிருக்கிறார். இத்தியானங்களைத் தமிழிலும் வெளியிடும்படி கடந்த சில வருடங்களாக என்னை ஊக்குவித்து வந்து, தொடர்ந்தும் ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு மிக்க நன்றி. 

வாழ்வின் செழிப்பான காலங்களிலும் சரி, துன்பத்தின் பள்ளத்தாக்குகளைக் கடந்த நேரங்களிலும் சரி, இந்தத் தியானங்களை எழுதுவது எனது ஆன்மீக வாழ்வின் ஒரு முக்கிய தூணாக அமைந்தது. இது ஆண்டவருடனான எனது நெருக்கத்தை ஆழப்படுத்தியதுடன், வேறெங்கும் கிடைக்காத ஒரு பலத்தையும் எனக்கு அளித்தது.

இப்பயணம் எப்போதும் ஒரு நேர்க்கோடாக அமையவில்லை. சில நேரங்களில் ஒரு கட்டாய இடைவெளி தேவைப்பட்டது—வார்த்தைகளே மௌனமான நீண்ட மௌனக் காலங்கள் அவை. இருப்பினும், அந்த அமைதியிலும் தேவன் கிரியை செய்து கொண்டுதான் இருந்தார். இன்றுவரை இந்த ஊழியம் தொடர்ந்து நடைபெற்று வருவது, முற்றிலும் அவருடைய திவ்விய பராமரிப்பிற்கும் தாங்குகின்ற கிருபைக்கும் சான்றாகும்.

இந்த ஊழியத்தை ஜெபத்தினால் தாங்கி நிற்கும் கிறிஸ்துவுக்குள் அன்பான ஒவ்வொரு நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தியானங்கள் என் ஆத்துமாவை எவ்வாறு வளப்படுத்துகின்றதோ, அதேபோல் உங்கள் வாழ்விலும் ஒரு ஒளியாகவும் ஆசீர்வாதமாகவும் தொடர வேண்டும் என்பதே எனது நம்பிக்கையும் ஜெபமும் ஆகும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பின்,
எபனேசர் பிறேமன் வீரசிங்கம்


*** *** ***

கீழே பட்டியல்ப்படுத்தியிருக்கும் தலைப்புகளில் விரும்பியதொன்றைத் தேர்ந்தெடுத்து வாசிக்க, தாங்கள் தெரிவு செய்யும் தலைப்பின் மேல் ஒரு முறை அழுத்தவும்.


இவ்வாரத் தியானம்

கடந்த வாரத் தியானங்கள்




























Click & Follow

The Weekly Devotions WhatsApp Channel

for Regular Updates



Click & Follow 
The Weekly Devotions YouTube Channel
for Regular Updates on Audio Versions

Topics Popular Among the Readers